Posts

விக்ரமாதித்ய ஸ்ரீ கொண்டா - முன்னுரை

Image
ஆசிரியரின் மேஜையிலிருந்து .... 2016 ஆம் வருடம் நான் நம்  ஸெளராஷ்ட்ர  மொழியில் ஒரு சாஹித்திய படைப்பு படைக்க வேண்டும் என்று எண்ணினேன்.  சமஸ்க்ரிதத்தில் உள்ள பல கதைகளை ஆராய்ந்த போது, உலகிலேயே முதன் முதலில் எழுதப்பட்ட பெரும் கதை, "குணாட்டியா" என்பவரால் "பைசாசி" மொழியில் எழுதப்பட்ட "ப்ருஹத் கதா"  என்பதை அறிந்தேன். இது ஆயிரக்கணக்கான கதைகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இதுதான்  நாவல் கதைகளின் ஆரம்பம். இந்த "பிருஹத் கதா" வை ஆதாரமாகக் கொண்டு  பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான கதைகள் புனையப்பட்டு  இருக்கின்றன. 11ஆம் நூற்றாண்டில் "சோமதேவர்" என்பவர் "கதா சரிதா சாகரா" என்ற பெரும் கதையை எழுதினர்.   இதில் நம் எல்லோருக்கும் பிடித்த, கதை ஒன்று உண்டு. அது தான் "வேதாள பஞ்ச விம்ஷதி கதா" (வேதாளம் சொன்ன 25 கதைகள்) மற்றும் "ஸிம்ஹாஸன த்வா த்ரிம்ஷிகா" (சிம்மாசனத்தில் உள்ள 32 பாவைகள் சொன்ன கதைகள்). இந்த இரண்டுமாக சேர்ந்து "விக்ரமாதித்தன் கதைகள்" என்ற பெயரில்  உலகமெங்கும் பிரசித்தி பெற்று உள்ளன. 9ஆம் நூற்றாண்டில் &